தன்னைத்  தாழ்த்துவதும் ஆணவமே

தீவிரமான தாங்க முடியாத தலை நோயால் அவதிப்படுவதைப் போல ஒரு முறை கிருஷ்ணர் நடித்தார். அந்த நடிப்பு மிகவும் இயல்பாக (தத்ரூபமாக) இருந்தது. தனது தலையில் அழுத்தமாகத் துணிகளைச் சுற்றி நிம்மதியில்லாமல்  இப்படியும் அப்படியும் படுக்கையில் உருண்டார். விழிகள் சிவந்து கடும் துயர் அடைந்தார். முகம் வெளிறி வீங்கி விட்டது. பாமா ருக்மணி மற்றும் உள்ள ராணிகள் தங்களால் முடிந்த துன்பந் தணிக்கும் பரிகாரங்களைச் செய்தனர். ஆனால் அவை அனைத்தும் பயன் அளிக்கவில்லை. இறுதியாக நாரதருடன் கலந்து ஆலோசித்தனர். நாரதர் கண்ணன் படுத்திருந்த அறைக்குச் சென்று, இதற்கு என்ன மருந்து கொடுத்தால் குணமாகும் என்று கண்ணனிடம் கேட்டார். “உண்மையான பக்தனின் பாத தூசியே இதற்குரிய மருந்து”, என்றார் கண்ணன். அடுத்த நொடியே பெயர்பெற்ற பகவானின் பக்தர்கள் சிலரை, நாரதர் அணுகி கண்ணன் கூறியவற்றை கூறினார்; ஆனால் அவர்களோ தங்களை மிகவும் தாழ்ந்தவர்கள் ஆகக் (தகுதி இல்லாதவர்களாக)  கருதிக்கொண்டு, பிரபு கண்ணனுக்கு தங்கள் பாத தூசியை மருந்தாக கொடுக்க மறுத்துவிட்டனர். 

இது ஆணவத்தில் மற்றொரு வகை. நான் தாழ்ந்தவன், அற்ப மானவன், சிறியவன், பயனற்றவன், ஏழை, பாவி, இழிவானவன் என்று எண்ணுவதும் ஆணவமே. உயர்வு மனப்பான்மையைச் சேர்ந்த ஆணவத்தைப் போலவே தாழ்வுமனப்பான்மையும் ஆணவத்தைச் சேர்ந்ததுதான்; எனவே நீங்கள் உங்களைத் தாழ்வாகவும் நினைக்கக்கூடாது. அவர்களுடைய பாத தூசி பயன் தராது என கருதி இறைவன் கேட்டதை அவர்கள் தர விரும்பவில்லை என்று கூறிவிட்டனர். நாரதர் ஏமாற்றத்துடன் கண்ணனிடம் திரும்பினார். 

நாரதரிடம், கோபிகள் வாழும் பிருந்தாவனத்திற்கு சென்று வந்தீர்களா? என்று கண்ணன் கேட்டார். அதைக் கேட்டவுடன் அரசிகள் நகைத்தனர்; நாரதரும்,  பக்தியைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்று எண்ணிக்கொண்டு அரை மனதுடன் கோபியர்களை  நோக்கி விரைந்தார். 

பகவான் உடல் நலமற்று இருக்கிறார்!! என்று கேள்விப் பட்ட அடுத்த நொடியே கோபியர் மறு சிந்தனை எதுவுமின்றி தமது பாத தூசிகளை எடுத்து நாரதரின் கரத்தில் நிரப்பினர். நாரதர் துவாரகையை அடைந்தபோது தலைவலி ஏற்கனவே பறந்துவிட்டது. 

தன்னைத் தாழ்த்துவதும் ஆணவமே என்பதையும் இறைவன் ஆணைக்கு மறுப்புத் தெரிவிக்காமல் அடி பணிய வேண்டும் என்பதையும் போதிக்க இறைவன் நடத்திய  ஐந்து நாள் நாடகம் இது.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0