சீதை ராதை கோதையாய்

  • குழலும் யாழுமினிது குழல் மொழி வாயம்மையே
  • உனது அன்புக்கருணை யழகு
  • குவியும் மேகக்கூட்டங்களழகு பிரம்மவித்யாநாயகி
  • யுன்னருட்கோலம் தானழகு
  • துயரில் தவிக்கும் நெஞ்சங்களைக் குளிர்விக்கும்
  • கோலவிழியம்மை நாயகியே
  • உன் கொஞ்சும் எழிலே அழகு
  • தழைக்கும் குலமே என்றும் விளிக்குமுனையே
  • இருவினை களைந்து மும்மலங்களகற்றக்
  • கூறி விளங்கும் முத்தாரம்மனே உன்கொலுவுமழகு
  • விழிக்குத் துணை வாழ்வரசியுன் னருளாசியே
  • வழிக்குத்துணை வடிவரசியுன்
  • வாழ்வியலறவுரையருளுரைகளே
  • பரப்பிரம்ம ஆதிசக்தி பிரம்மராம்பிகைத்
  • தாயே பிறவிப் பிணியகலத்தான் வேண்டு
  • முன் வரமே, அது அருளும் தருமே
  • பர்த்தியின் ஸ்ரீ சத்யசாயீஸ்வரி சிவசக்தி
  • ஸ்வரூபிணி சாயிமா சகல உயிர்களையும்
  • வாழவைப்பாய் தாயே
  • சாயி சீதையும் நீ, சாயி கோதையும் நீ, சாயி ராதையும் நீ
  • முத்தேவியராயும் ஆனந்தவல்லி, ஆதிபராசக்தியும்
  • கல்யாண விகிர்தீஸ்வரர் சமேத பண்ணேர்
  • மொழியம்மை, மதுரபாஷிணித்தாயாரும்,
  • நீ தானே தாயே சாயிமா, சத்தியமாய், சாத்வீகமாய்
  • உலகவாழ்வியலில் வாழ்வாங்கு, தர்ம வாழ்வில் வாழக்
  • கருணை அன்பு அருள் தருவாய் ஸ்ரீ பர்த்தி சாயிமா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0