நீ நடத்திடும் மாயம்

  • மூலாதாரனுன் மூலம் ஆதிமூலம் நான்கு யுகங்களிலும்
  • நீதான் ஆதாரமூலம்
  • சாயி சிவமே உன் பாதார விந்தங்களே அக்கேதார மூலம்
  • ஆதி அந்தமில்லாச் சேதாரமின்றிக் காத்திடும்
  • ஞாலமூலம், ஞானத்தின் மூலம், ஞாயிறின் மூலம்
  • சனாதன சாரதியாய் வந்துதித்த சத்யசாயி சிவசக்தி மூலம்
  • சுவாமியுன் கருணை தானெங்களின்
  • இதயப்பாலம், உன் தெய்வீக பாவம்,
  • அனைத்து உயிரிலும் உன்னதமாய் நீ நடத்திடும் மாயம்
  • யுகங்கள் மாறினுமுன் யுக்திகள் மாறாததில் நீ மாலன்
  • இகபர சுகமளித் திருள் நீக்கி இன்பம் தந்திடும் நிமலன்
  • விமலன், பரமன், பந்தன், சொந்தன்,
  • சாயி என்றழைக்கச் சடுதியில் வரும் சக்திபாலன்
  • பாபாவென விளிக்கப் பறந்துவரும் பரசிவமைந்தன்
  • சத்யசாயி என்றழைக்க முத்தேவியராய் வரும் சக்தி வடிவம்
  • ஸ்ரீ சத்திய சாயி எனக் கூப்பிட்ட குரலுக்கு
  • ஓடிவரும் கஜேந்திர மோட்சம்
  • தாயுமானவனாய் வந்து தயை செய்திடும் தானுமாலயன்
  • பக்தை சபரிகளுக்கு மோட்சம்தரும் சபரீசன்
  • பக்தர்களுக்கருளும் பர்த்திவாசன்
  • ஏகன் அநேகன் எங்கள் சொந்தன் பந்தன், பாந்தன்
  • பிரேமஸ்வரூபன் பிரியதர்ஷனன்
  • எப்பெயரி லழைத்தாலும் பரப்பிரம்மமாய் வந்து
  • முக்தி தந்திடுமுன் பதமலர் தொழுது
  • பணிகிறோம் போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0