‘செவ்வாய்’ க்கிழமைதனில்

  • செப்பும் வார்த்தையும் செய்யும் தொழிலும்
  • உனையன்றி யாது?
  • உன் செங்கமலப் பதமலர் தரிசனத்தில்தான்
  • என்றும் துன்பமென்ப தேது?
  • செங்கோட்டீசனின் பாதி நீ செங்கோலொச்சும்
  • ஆதிசக்தி மலையரசி நீ
  • மங்களம் நல்கியே சிம்மாசனமதில் வீற்றிருக்கும்
  • மஞ்சுள நாயகியே ஸ்ரீ சத்திய சாயீஸ்வரியே
  • உன் மலரடி போற்றி போற்றி
  • உன் செவ்வாயில் வரமளிக்க செவ்வாயிந் நாளில்
  • வருக அருளே தருக. கருணை பொழிக.
  • சிவசக்தி ஸ்வரூபிணியாய், பர்த்தீஸ்வரியாய்
  • உன் பதமலர் பணிந்து தொழத்தருகவே, அருள்கவே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0