நீயின்றி மகிழ்வேது

  • நீரின்றி நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏது மகிழ்ச்சி ?
  • நீ இன்றி உன் கருணையின்றி உலகியலில் வேறேது
  • நிகழ்ச்சி சாயிமா?
  • யமுனை கங்கையுடனிணையும் பொழுது
  • தன் தனித்தன்மையை இழந்து
  • கங்கையாகவே மாறி அமைதி கொள்வது போலுனது
  • அருள் அன்பு பிரேமையில் கலந்து ஆனந்திக்கிறது
  • மனம், மெய், ஆன்மாவும், சாயிமா
  • சம்சார சாகரத்தில் உழலும் பக்தர்க்கு
  • அதைக் கடத்துவிக்கும் பாலமாகிறாய்,
  • முக்தியளிக்கிறாய்
  • லீலைகள் புரிவதில் மனம் செலுத்தும் நீலோத் பல மலரான
  • சாயிதேவியே பர்த்தித்தலத்திற்கழகு சேர்க்கும்
  • அன்பு ஆபரணமும் நீயாகிறாய்
  • பாரினில் பன்மதப்பக்தர்க்கருள்புரியும்
  • நாகாபரணமும் நீயே
  • ஆதிசக்தி பார்வதி காமாட்சி முத்தேவியராய்
  • முன் வந்து காத்து நிற்கும் முதுபெரும்
  • முச்சக்திகளும் நீ தானே சாயிமா ?
  • மங்கலம் நல்க, மஞ்சள் மங்கல நாணில், மஞ்சளும்
  • குங்குமமும் நிலைத்து நிற்க, நற்பவி நல்வாழ்வு
  • மலரச்செய்ய ஆடிவெள்ளியினில் அருள்தர வருவாயே
  • ஸ்ரீ சத்ய சாயீஸ்வரி பர்த்தீஸ்வரி
  • சிவசக்தி ஸ்வரூபிணி சாயிமா.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0