பரமம் பவித்ரம் பாபா விபூதி
- ‘நானிருக்க பயமேன் பங்காரு’ எனுமுன் வாக்கு சத்தியவாக்கு
- நீயிருக்கப் பயமில்லை என்பது எங்களின் சத்திய சாத்தியநித்ய
- சாத்வீக சாந்நித்ய சத்சங்க வாக்கு சுவாமி
- உன்னையன்றி யார் காப்பார், உன் அபயஹஸ்தமின்றி
- வேறு துணையேது?
- உன் அனுபூதி பரமபவித்ர பாபா விபூதி யன்றி
- நலம் தரும் நற்பவி யெது ?
- பர்த்தித் தலப்பரப்பிரும்மப் பஞ்சாட்சரனே சாயி சர்வேசா
- உன் பாதார விந்தம் தொழுதுனைத் துதித்திடும் அனுக்கிரகம்
- எப்போதும் எங்களுக்குக் கிடைத்திட
- வுன்சங்கல்பம் தரவேண்டும்
- ஸ்ரீ சைலசிவமே, ஓங்காரேஷ்வர ஸ்ரீசத்யசாயிசிவமே
- பிரணவப் பரப்பிரும்மமே உன் கருணைக்கேது
- எல்லையே! இல்லையே ஏதும் விலையே !
- மாறிடுமே துயர் நிலையே
- உனது லீலா விநோத மகிமைகளு முந்தன்அன்பு
- அருட்கருணையின் நிலையே தானே !
- உன் கருணைக்கடாட்சம் கயிலை மலையே
- சம்சாரக் கடலைக் கடக்கும் பிறவிப் பயன் தீர்க்கும்
- கருணா சாகரப் பர்த்திப் பதியே
- உன் பங்கயத் தாமரைமலர்ப்
- பாதார விந்தங்களில் சரணாகதியே
– தமிழரசி பாலசுப்பிரமணியம்