மனம், மெய், மொழியாலுனை
- மனம் மெய் மொழியாலுனைத் தொழுது
 - வாழ்ந்திட அருள் தரவேண்டும் சாயீசா
 - பிறர் குறை நீக்கிக் குற்றங்கள் களைந்தே மன்னித்தருளும்
 - குணம் வேண்டவுன் னருட்கருணை வேண்டும் சாயீசா
 - மனமதில் நீ வீற்றிருந்து மக்கள் சேவையாற்றிடவே
 - எப்போது முறுதுணையாய் நீ வரவேண்டும் சாயீசா
 
- கிட்டற்கரிய இம்மானிடப் பிறவியில் மனிதம் காத்து வாழ்ந்திட
 - சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சை வழியில் நடந்திட
 - உளமுருகி யுன்னடி தொழுதடி பணிந்துயிர்த்து
 - வாழ்ந்தால் போதும் சாயீசா
 - துயிலென்பதேது உனக்கு பக்தர்தமை இமையாய்க்
 - காத்தருள்வதுதானே உன் யோக நித்திரைத்வம்
 
- முப்போது முன்னடியவரைக் காத்தலே உன்கருணைத்வம்
 - அது உன் அன்பின் அழகான, அதிசய, ஆச்சர்ய முத்திரைத்வம்
 - கருவறைத் தெய்வமாய் நீ அருள்பாலிக்கும் புனிதப் பர்த்தியே
 - கயிலை அது ஸ்ரீ சத்யசாயித்வம்
 - மகாமகம் சாயி மகாத்மியம்
 - ஸ்ரீ சத்ய சாயீஸ்வர சிவமே வருக அருள் தருக நலம் நல்க.
 
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
  
  Help Desk Number: