முத்தமிழ் போல்
- மஞ்சளும் குங்குமமும் தந்து மாங்கல்யதாரண மீந்து
 - மங்கல வாழ்வு அளித்தாய்
 - திங்களும் மதியுமான உன் இருநயனங்களின் தீட்சையில்
 - வானமும் பூமியுமான எல்லைவரை
 - மகிழவும் வைத்தாய்
 
- முக்கண் முதல்வன் உமை பாதிபாகச் சிவனாய்
 - அர்த்தநாரீஸ்வரராக அர்த்தமுள்ள
 - வாழ்வையமைத்து வைத்தாய்
 - முத்தமிழ்போல் மக்கட்செல்வங்களை ஈந்து தமிழுக்கும்
 - தமிழெனக்கும் பொருள் தந்து விட்டாய்
 - வாழ்வியலை ஆன்மீக வியலாக்கி இயன்ற சேவைகள்
 - செய்திட உன்னருட் சங்கல்பத்தால் பணித்திட்டாய்
 
- பதினாறு பேறுகள் தந்துன் ஆனந்த சாகரத்தில்
 - சங்கமிக்கச் செய்தாய்
 - மண்ணும் விண்ணுமுள்ள வரை உன் சனாதன தர்மமும்
 - கீதைப்பாதையும் சத்தியம் தர்மம் சாந்தி பிரேமை
 - அஹிம்சையை வழிநடத்தியிவ்வகிலத்தில் அன்பை
 - மலரச் செய்துன்னருளைப் பொழிய வைக்கும்
 - உன் மகா கருணையை மிளிர வைக்கும்
 
- மாதா, பிதா, குரு, தெய்வம், சகாவாய் உன்
 - சாத்வீகத்தை மலர வைக்கும்
 - சாயி உன் புனிதச் சரித்திரத்தை ஒளிர வைக்கும்
 - பிரசாந்தியின் ஞாயிறே ஞாயிறில் ஞாலத்தில் உன்
 - அருட்கதிர்கள் விரிந்து பரந்து அருள் ஒளி வெள்ளம் பாயட்டும்
 
- ஸ்ரீ சத்திய சாயி நாததெய்வமேசந்ததிகள் தழைத்திட
 - வுன்திருவடித்தாள் பணிந்து தொழுகின்றோம்
 - உன் சரண கமலங்களின் சரணாகதி தத்துவம்
 - அனைவரையும் காத்து நல் வாழ்வளிக்கட்டும் சுவாமி.
 
– தமிழரசி பாலசுப்பிரமணியம்
  
  Help Desk Number: