ரட்சிக்கப்பட தீட்சை பெறுங்கள்

இறைவன் கருணையும், இரக்கமும் நிரம்பப் பெற்றவர். பீஷ்மர் இரண்டு அரசர்களுக்கும் பிதாமகராக இருந்த போதும், கெளரவர்கள் பக்கம் நின்றுப் போரிட்டார். யார் வல்லவர் என்பதை முடிவு கட்டும் அந்த குருக்ஷேத்ரப் போர் பீஷ்மர் தலைமையில் எட்டு நாள் நடைபெற்ற பின்பும், கௌரவர்கள் வெற்றி அடைவதற்குரிய அறிகுறி எதுவும் தெரியவில்லை. எனவே, கௌரவர்களில் மூத்தவரான துரியோதனன், அவரை அணுகி, பகைவர் மீது அதிபயங்கரமான தாக்குதல் நடத்துவதற்குரிய வகையில் வழிகாட்டி அவரையே வழிநடத்தும்படி வேண்டினான். வெற்றி அல்லது வீரமரணம் நாளை அடைவது உறுதி என்றார் பீஷ்மர். 

இதை அறிந்து கொண்ட கண்ணன், பாண்டவர்களின் அரசியை (கண்ணன் பால் அளவற்ற ஈடுபாடு உடையவள்) அணுகி பீஷ்மரின் முகாமுக்குத் தன்னுடன் வரும்படி நள்ளிரவில் கேட்டான். மனம் சோர்ந்து போன அவளுக்குத் தெம்பு அளித்ததுப் பிரார்த்தனை. அந்தப் பிரார்த்தனைதான் பகவானை வரவைத்தது. முகத்தை மூடிய வண்ணம் பீஷ்மரின் முகாமுக்குள் நுழைந்தாள். காலணிகளின் டக், டக் ஒலி அமைதியைக் கெடுத்து காவலர்களை உஷார் படுத்திவிடுமாதலால் அவற்றை அகற்றி விடும்படி அவளிடம் கண்ணன் கூறினார். அதை ஒரு பட்டுக் கைக்குட்டையால் சுற்றித் தன் கையில் வைத்துக் கொண்டார் பிரபு.

திரெளபதி முகாமுக்குள் நுழைந்து பீஷ்மரின் பாதங்களை வணங்கினாள். “உன் மணவாழ்க்கையின் மகிழ்ச்சி பலப்பல ஆண்டுகள் நீடிப்பதாகுக”, என்று (செய்யக்கூடாத ஆசீர்வாதத்தை) தன்னையறியாமல் ஆசீர்வாதம் செய்துவிட்டார். 

ஆசீர்வாதம் முடிந்த பின் திரெளபதி அவர் பார்க்கும் வகையில் நின்றுக் கொண்டு அவளது கணவன்மார்கள் மீது (பாண்டவர்களை) அவர் அம்பு எய்தக் கூடாது என்று வேண்டினாள். இந்த ராஜதந்திரம் அனைத்துக்கும் மூலக் காரணம் கண்ணனாகத்தான் இருக்க வேண்டும் என்று பீஷ்மர் யூகித்தார்; தனது சாவு தவிர்க்க முடியாதது என்பதும் அவருக்குப் புரிந்து விட்டது. “நாம் அனைவரும் இறைவனின் கை பொம்மைகள்” என்று கூறிக்கொண்டே முகாம் வாசலருகே நிற்கும் கண்ணனின் கையைப் பார்த்து அந்தப் பொட்டலத்துக்குள் என்ன இருக்கிறது என்றுக் கேட்டார். 

தனது பக்தையின் பாத அணிகளை பகவான் தனதுக் கரங்களில் சுமக்கும் அளவுக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டதைக் கேட்ட பீஷ்மரின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்; அவர் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார். வெற்றி கிட்டும்வரை உங்களுக்கு வழிகாட்டிக் காப்பாற்றுவார். முழுமயைான ஈடுபாடும், அசையாத நம்பிக்கையும் ஒருபோதும் இறையருளைப் பெறுவதில் தோல்வி அடைவதில்லை. தங்கு தடையற்ற சரணாகதியில் திரௌபதிக்கு நம்பிக்கை இருந்தது. அவளுடைய வாழ்க்கை முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டது. பாண்டவர் ஐவரும் உடலுக்கு உற்சாகமூட்டும் பஞ்ச பிராணன் ஆவர். அவளுடைய இடையறாத விழிப்புணர்வும், பொறுப்பும் பஞ்ச பிராணனுக்கு ஆதாரமான மூல ஆற்றலாகும்.

நம்பிக்கை எனும் வேரூன்ற விரும்பவோர் வெளி நிகழ்ச்சிகளாலும், உணர்ச்சி வயப்பட்ட      மனப்போராட்டங்களாலும் லௌகீகச் சாதனைகளாலும், செயல்களாலும், வழிதவறிப் போகாமல் ராமர், கிருஷ்ணர் முதலிய அவதாரக் கடல்களின் மர்மத்தை அறியும் வகையில் அடிப்பகுதிவரை நீந்த வேண்டும். ராமனைச் சகோதரனாகவோ, மகனாகவோ, மனைவிக் கடத்தப்பட்டக் காரணத்தால் கவலையுற்றவனாகவோ, கடும்போர்ப் புரிந்து அவளை மீட்ட வீரனாகவோ பாவிக்கக் கூடாது. அதன் உள் மர்மங்களை அறிய வேண்டுமெனில், அதன் குளுமைமிகு அடிப்பகுதிவரை நீந்தினால் நீங்கள் அவரைப் போற்ற முடியும். இதற்கரிய செயல்முறையைக் கண்டுபிடித்துச் சிறப்புப் பெற்றவர்கள் இந்திய ரிஷிகள். அதனால்தான், இந்தியா உலகுக்கே குருவாகும் அந்தஸ்தைப் பெற்று உயர்ந்தது. முழுமையான பணிவு, மஹான்களை மனமாற மதித்தல், இறைவன் மீதும், அவனது மகிமைகள் மீதும் மனதை ஒருமைப்படுத்தல், இவைகளே உங்களை ரட்சிப்பதற்கு (காப்பற்றுவதற்குரிய) நீங்கள் பெறவேண்டிய தீட்சை ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0