விலங்குகளின் உலக மகாநாடு

காலங்கள் தோறும் நடந்து வரும் பரிணாம வளர்ச்சியில், மனிதன் மிகச் சிறந்த மிருகமாக இறுதியில் உருவாக்கப்பட்டான். ஆனால் அவனோ மானிட பாரம்பரியத்துக்குரிய அறிவுப்பூர்வமான வாழ்க்கையை வாழ முயல்வதில்லை. படைப்பின் உச்சியில் இருப்பவன் என்றும், உலக உயிரினங்கள் அனைத்துக்கும் அரசன் என்றும், தன்னைக் கருதும் அதிகாரத்தை, மனிதனுக்கு யார் அளித்தது என்பதை முடிவு செய்ய விலங்குகள் ஓர் உலக மகாநாடு நடத்தின. மகாநாட்டுக்குச் சிங்கம் தலைமைத் தாங்கியது. 

மனிதனின் அதிகாரங்கள் குறித்து வினாக்களைத் தொடுத்தது புலி. புலியின் காரசாரமான எதிர்ப்புக் குரலை ஆதரித்துச் சிறுத்தை ஆமோதித்தது (வழி மொழிந்தது). மனிதனின் செயலைக்கண்டித்து, விரிவாகப் பேசியது. “உலகிலுள்ள விலங்குகள் அனைத்தும் மனிதனை ஒரு நடமாடும் அவமானச் சின்னமாகக் கருதுகின்றன. போதையினால் உயிரைக்கொல்லும் நச்சுப்பானங்களைத் தயாரிப்பது, அவற்றைக்குடித்து மகிழ்வது முதலியவற்றை அடிமுட்டாள் தனமாகக் கருதுவதற்குப் பதிலாகப் பெருமைபட்டுக் கொள்கிறான்.

தனது சகமனித இனத்தை ஏமாற்றுகிறான். அவனுடைய மூலதனங்கள், ஆற்றல்கள் அனைத்தையும் செலவழித்து, அழிவுதரும் ஆயுதங்களை உற்பத்தி செய்து, சகோதர சகோதரிகளை ஒழித்துக்கட்டுகிறான். குதிரைகளையும், நாய்களையும் பேணிப்பாதுகாத்து அவற்றை அசுரவேகத்தில் பந்தயங்களில் ஓட விட்டுச் சம்பாதிக்கிறான். அவை தாவி ஒடும்போது, கொடுமையாக, அக்கிரமமாக, அநீதியாக, ஆத்திரமுடையவனாக, வெட்கம்கெட்டவனாக அவற்றை நடத்துகிறான். 

விலங்கு உலகில் மோசமான முன் மாதிரியாகத் திகழ்பவன் மனிதனே. உன்னதமான உணர்வுகளும், அறிவுநுட்பமும் இருந்தபோதும் மனிதனின் நடத்தை அருவருப்பு உடையதாகவும் இழிவானதாகவுமே இருக்கிறது. அடுத்தவேளை உணவு கிட்டும் என்ற உறுதி நமக்கில்லை; ஓய்வு கொள்ள நிம்மதியான இடம் நமக்குக் கிடையாது. நமது தோலைத்தவிர போர்த்திக் கொள்ள நமக்கு என்ன இருக்கிறது? இத்தனை இருப்பினும் நம்மில் கடைத்தரமானவர்கூட மனிதன் என அழைக்கப்படும் அரக்கனை விட இறைவனின் சிறந்த குழந்தைகளே” என்று கூறி நிறைவு செய்தது.

அதன்பின்நரி எழுந்து பேசியது:- “நமக்கெல்லாம் தாம்பத்தியத்திற்கென்று ஒரு காலம் இருக்கிறது. ஆனால் மனிதனோ, சொல்லுவதற்கே நா கூசுகிறது, எல்லா நடைமுறைகளையும் தகர்த்து விட்டான். கட்டுப்பாடுகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. தன் வசதிக்கேற்ப சட்டங்களை வகுத்துக்கொண்டு மற்ற உயிரினங்களை ஒழித்துக்கட்டுகிறான்”. 

The lion rose, to sum up the arguments.

சிங்கம் எழுந்து வாதப் பிரதிவாதங்களைத் தொகுத்துக் கூறியது. மனிதனின் தகுதியற்ற மேலாண்மையால் ஆத்திரமுற்ற விலங்குகளின் பொதுவான கண்டனத்தைச் சிங்கம் ஏற்றுக் கொண்டது. அதே சமயம், அவைகள் குறைகளையே கூறிக் கொண்டிருந்தது, தலைவராகிய சிங்கத்திற்குப் பிடிக்கவில்லை. “மனிதர்களில் மிகச்சிறந்தவர்களும் இருக்கிறார்கள்; மிக மோசமானவர்களும் இருக்கிறார்கள். சிறந்தவர்கள் பற்றற்று, நன்மை தீமை பாகுபாடு அறிந்து, கடந்தகாலத்தைப் பயனுள்ள முறையில் முறையாகப் பயன்படுத்தி நிம்மதிபெற்றனர். இப்படிப்பட்ட சிறந்த மனிதர்களை நமது தலைவர்களாக ஏற்று வரவேற்க வேண்டும். அதே சமயம், மோசமான மனிதர்களுக்கு நீங்கள் தெரிவித்த கண்டனமும், எதிர்ப்பும் பொருத்தமானதே” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தது.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0