வெற்றி உறுதி

“யத்ர யோகேஸ்வரா கிருஷ்ணா யத்ர பர்தோ தனுர்தாரா, தத்ர ஸ்ரீர் விஜயேோ புதி த்ருவ நீகிர் மதிர் மம” என்று கீதையின் இறுதி சுலோகம் கூறுகிறது.

உன்னத யோகியான கண்ணனும், வில் வீரனான அர்ஜுனனும் இருக்குமிடத்தில் நீதியும் சத்தியமும் வெல்வது உறுதி. இந்த சுலோகம் உறுதி அளிக்கும் வெற்றி மகாபாரத அர்ஜுனனுக்கு மட்டும் உரியதல்ல. வில் சிறந்த வீரத்தையும் நம்பிக்கையையும் பின்வாங்காத செயல்திறனையும் குறிக்கும் சின்னம். நீங்கள் அர்ஜுனர்கள் ஆவது எப்படி? வெண்மையை, தூய்மையை, மாசற்றதை, குற்றமற்றதைக் குறிக்கும் சொல் அர்ஜுனன்.

நீங்கள் அர்ஜுனனாக மாறி வில்லை எடுத்தவுடன் (பிரணவம் அல்லது ஓம் என்பது அம்பு எனவும் இறைவன் இலக்கு எனவும் உபநிடதங்கள் முழங்குகின்றன). கண்ணன் உங்கள் முன் தோன்ற தயாராக இருக்கிறார்; ஏனெனில் அவர் எல்லா இடங்களிலும் காலங்களிலும் இருப்பவர். அப்போது அவரை அழைக்கவோ, எழுந்தருள்விக்கவோ வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் இதயத்திலிருந்தே அவர் பதில் அளிப்பவர்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0