ஸ்ரீ சாயி சரண்

  • முகிழ்த்திருக்கும் மொட்டுகளில் உன் சிருஷ்டியின் நேசம்
  • மலர்ந்திடும் பல்வண்ணப் பூக்களிலுன் சிறப்பொக்கும் வாசம்
  • நெகிழ்ந்திருக்கும் மனதிலுமுன் மனிதத்தின் அன்பான பாசம்
  • உன்னில் திளைத்து மகிழ்ந்திருந்த தருணங்களெல்லாம்
  • உன் சரணாகதியின் தாசம்
  • மழை, மலை, வளங்களில் உன் மகிமைகளின் கருணாம்சம்
  • நிற, நில, வகைகளிலுன், பஞ்சபூதத் தத்வார்த்தம்
  • கடல், அலைகளின் ஆழம், அமைதியிலுன்,
  • அன்பின் ஆத்மார்த்தம், நிலவிலும்,
  • சூர்ய ஒளியிலும் ஒளிருமுன் னருளின் அத்யந்தம்
  • கயிலை மலையின், கவித்துவச் சிவமே சாயி சிவனே
  • மேருமலையின், மேன்மையாம் தவமே சாயி அகமே
  • தென்பொதிகைத் தென்றலின், சுகமே தென்னாடும்
  • எந்நாடும் உடைய சாயி செயமே
  • உன் அன்பு, மதம், மொழி, இனத்திலிணைந்திட்டவர்க்கு
  • இன்னல்கள் களைந்து இருள் நீக்கி
  • மருள்போக்கி துயர்தீர்த்தருட்கருணை தருவாயே
  • ஸ்ரீ சத்யசாய் ஈஸ்வர சிவசக்தி ஸ்வரூபனே
  • உன் மலரடி சரணம் போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0