இறைவன் விலாசம்
- ஆரம்பத்திற்கே ஆரம்பமாய்
- பிரபஞ்ச முடிவற்றப் பேரின்பமாய்
- ஆதாரத்திற்கே ஆதாரமாய்
- ஆழ்ந்தகன்ற பேரியக்கமாய்
- தூய ஒளி நிறை பெருத்துவக்கமாய்
- கோடித் தாயன்பின் பெருத்துவக்கமாய்
- தியான முடிவில் நிகழும்
- ஆனந்த அனுபவமாய்
- ஞான வடிவில் ஒளிரும்
- மோன அனுபூதியாய்
- மோகம் அழிக்க வந்த
- மோக வடிவமாய்
- யோகம் அளிக்க வந்த
- யோக வெளிச்சமாய்
- பெயரிடப்படாத பெயராய்
- வர்ணிக்க முடியா வர்ணமாய்
- அண்ட சராசரமும்
- நாலரை அடியில்
- நிமிர்ந்து நடக்கும் அதிசயமாய்…
- எலும்பு சதையில் பிரபஞ்சமே
- எழுந்திருக்கும் அற்புதமாய்..
- சூரிய சந்திரருக்கே
- கண்கூசும் படியான
- வெளிச்ச தேகமாய்…
- இந்திராதி தேவரும்
- இருகரம் வணங்க
- இறைவனே நீயாய்
- மனித வடிவெடுத்த
- மனிதாபிமானமே
- மனித மனதிலே தான்
- உன் சந்நிதானமே
- என் கவிதையின் காரணமே – கவி
- வரிகளை வரவேற்கும் தோரணமே
- மொழியிலாத கவிதையின்
- முழுமுதற்பூரணமே
- இருண்ட மேகம் தலையில்
- சுருண்டு நிற்கும்
- முடிகளா ? கார்
- முகில்களா ? கருநாகக்
- குடைகளா?
- உன்னை நீயே படைத்து
- உன்னழகில் நீயே வியந்து வைத்த
- திருஷ்டிப் பொட்டோ கன்னத்து மச்சம்
- அருவமாக உருவமாக
- ஒன்றுமாக இரண்டுமாக
- ஓரிரண்டின் நடுவுமாக
- நவமாக நிற்பவனே என்
- தவமதனை ஏற்பவனே
- நெருப்பை எரிக்கும்
- நிலவை உதிர்க்குமுன்
- பார்வையே மலர்த்தும்
- வாழ்வை
- அற்புதம் நீ
- உருவம் தாங்கி பூமிக்கு வந்த
- அவதாரம் நீ – உன்
- பொற்பதம் கங்கையாகி
- பூமியைத் தழுவிடும்
- உபகாரம் நீ! கவிச்
- சொற்பதம் நதியாகி
- கடலுக்குச் செய்திடும்
- உபசாரமாய் — உயர்த்
- தொற்பத உலகுக்கான
- ஆதவனைச் செய்திடும்
- அதிகாரம் நீ!
- சத்தியம் பேசுதல்
- சாயிராம மந்திரமோதுதல் என
- பக்தி மனதிற்கான
- சிருங்காரம் நீ
- பக்தி ஒன்றையே முழுதாய் அணியும்
- அலங்காரம் நீ!
- பூமி என்பதோ
- பூட்டப்பட்டிருக்கும் பூட்டுகள்
- உன்
- ஒவ்வொரு விரல்களுமே
- ஆன்மிகம் திறக்கும் சாவிகள்!
- கை அசைவினால் நீ
- காலம் அசைப்பவன்
- பிரம்மனையே படைத்த நீ
- பஸ்பம் படைப்பதா பரம அதிசயம்?
- வேத உபநிடதமாய் நீ
- பேசுவதெல்லாம்
- பிரபஞ்ச ரகசியம்!
- ஆருயிர்க்கெல்லாம் நீ
- அவசியம்!
- ஆன்மாக்களை உன்
- காலடி கட்டிப்போடும்
- இதுவல்லவா இறை வசியம்!
- மனமே ஏனினி கலக்கம்?
- அற்புதங்கள் ஆண்டவ சாயியின்
- அன்றாட வழக்கம்!
- மௌனமே ஆன்மிக முழக்கம்
- அகந்தையிலிருந்து விடுபட்டால்
- அப்போதிலிருந்தில்லை புழுக்கம்
- இறைவனே சத்யசாயியே
- நீயே இவ்வுலகின்
- கலங்கரை விளக்கம்!
- உனக்கெதற்கு இத்தனை விளக்கம்?!
- கவிஞர் வைரபாரதி
- (இறைவன் ஒரு கவிதை நூலிலிருந்து…)