உன்னில் சரணாகதி
- சாயி சிவமே நீதான் தவமாமகமத னுள்ளுறைகின்ற
- சீவன், செயம், சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை,
- அஹிம்சை, கருணை, காருண்யம் தர்மம்
- சனாதனம், சாத்வீகம், சங்கல்பம்,
- பஞ்சபூதமா மிவ்வகிலம் சத்யசாயின் பக்தித்வப்
- பிரவாக சாந்நித்யம்
- சிவசக்தி ஸ்வருப சிவாத்மிகம்
- வேதாத்ம, தத்வார்த்த சாகித்தியம் சுவாமி
- பர்த்தியம்பதிப் பரசிவமே ஸ்ரீ சத்யசாயீசா
- திங்களாய்ச் செவ்வாய் மலரச்சிரித்தே புதனில்
- பொன்னார் மேனியனே ஆன்ம வியாழனாய்
- விடிவெள்ளியாய் வடிவாய் உன் அபயஹஸ்த
- அன்பருளாசி வழங்கிடவே கருணையுடன் கனிவுடனே
- வருவாய் வருக வருகவே சுவாமியுன் பதமலர் பணியவே
- உன்னில் சரணாகதியே பாபா.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்