அன்னையர்க்கு அன்னையே
- அன்னையர்க்கு அன்னையே அருந்தவத்தெய்வம்
- முன்னையே முத்தமிழே உன்னைத்தான்
- துதித்த கண்களுக்கு ஏது இனி பயமே?
- எண்ணித் துணிந்து பணிந்து மக்கள் சேவையாற்றினால்
- நீ உன்னையே தந்து
- உய்விக்கவும் அருள் தர வருவாயே
- சிவ சக்தி தாயே சுயசித்தி தாராய் தாயுமான தாயே
- ஜெய கீர்த்தி சுபமாட்சி தருவாய் நீயே
- ஸ்ரீ சாயி சிவசக்தி தாயே சாயிமா மாதா பிதா குரு தெய்வச்
- சகாவானபவமுக்தி தாயே பரமே
- பஞ்சபூதங்களின் பராசரமே
- பக்தர் மனம் துஞ்சும் அபரஞ்சியே
- பொற்றாமரைக்குளப் பங்கயமே
- வற்றா ஜீவ நதிகளின் சங்கமமே – உன்
- சரணம் சரணம் சரணாகதமே, பிரதானமே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்