அகிலத்தில் அரசாட்சி

  • ஞாலமதிலெத்தனையோ அவதாரங்கள் அணிவகுத்தனர்
  • காலமதாம் கலியில் கண்கண்ட தெய்வமாயவதரித்தாய்
  • ஞானமதைச் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சையாய்
  • பக்தியில் விதைத்திட்டாய்
  • கானமதைச்செவி குளிரக்கேட்டு இன்புற இனிய
  • பஜன் பண்களா யிணைத்து அமைத்திட்டாய்
  • சனாதனத்தைச் சாத்தியமாக்கி சாகித்யம் படைத்திட்டாய்
  • பன்மதப்பக்தர்க்கும் பிரசாந்தியைப் புகலிடமாய்த் தந்திட்டாய்
  • இன்சொல்பேசி இனிதாயிதமாய்ப் பணிவாய்ச்
  • சேவைகளாற்றிடப் பணித்திட்டாய்
  • கல்வி மருத்துவம் குடிநீர் இசை சனாதன தர்மத்தை
  • வழி நடத்தி வாழ்வியலில் வளம் சேர்த்திட்டாய்
  • கீதைப்பாதை வழி நடத்திச் சனாதன சாரதியுமாகினாய்
  • அன்பு, மதம், இனம், மொழியால்,
  • அகிலத்தி லரசாட்சி செய்கிறாய்
  • பர்த்திப் பிரசாந்தி மனச்சாந்தி தரும்
  • மகாப் பேரமைதி யளித்திடும்
  • பிரகாந்தியெனப்பிரகடனப்படுத்தினாய்
  • வட விருட்சத் தபோவனத்தில் தியானம், செபம்,
  • மெய்ஞானம், கிட்டிட வரமளித்தாய்
  • பர்த்தித்தலப் பயணத்தைப் பர்த்தி
  • யாத்திரையாய் உருவாக்கினாய்
  • ஒவ்வொரு உள்ளத்திலும் தாய் தந்தை இல்லமாய் எண்ணி
  • மகிழ்ச்சியாய்க் கருவறையில்
  • உன்னை வணங்கிடச் சங்கல்பமருளினாய்
  • உன் பாதார விந்தங்களுக்குச் சந்ததியாய்ச்
  • சமர்ப்பணம் சுவாமி

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0