செயல் படுத்தப்படாத தீர்மானம்

ஒரு முறை ஒரு காட்டில் உள்ள மான்கள் ஒன்று கூடி, தங்களுடைய கோழைத்தனத்தைப் பற்றி விவாதித்தது. “விரைவான கால்களும் கூர்மையான கொம்புகளும் கொண்ட நாம் ஏன் இந்த அற்ப வேடர்களுக்கு பயப்பட வேண்டும்?” என்று அந்த மான்கள் கூட்டம் வாதிட்டுக் கொண்டிருந்தது.

இறுதியாக, எவரும் இனிமேல் வேட்டைக்காரர்களைக் கண்டு ஓடக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆரவாரம் எழுப்பிக் கொண்டிருந்த சமயத்தில் தொலைதூரத்தில் வேடர்களின் அலறல்கள் கேட்டது. அதை கேட்டு ஒரு மான் கூட அங்கு நிற்கவில்லை. அனைத்தும் தங்களின் கால்கள் தங்களை சுமந்து எவ்வளவு விரைந்து செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடியது.

அவைகளின் தீர்மானம் தோல்வியுற்றது.

எந்த ஒரு தீர்மானமும் செயல்படுத்தப்படுத்தாவிடில் அர்த்தமற்றதாகிவிடும்.

ஆதாரம்: அவதார மொழி அமுதம் (ஸத்ய ஸாயி ஸ்பீக்ஸ்), தொகுதி 3, அத்தியாயம் 31, 24/10/1963.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0