பங்காரு

  • ஆதி திருவரங்கமே பிரசாந்தியி னரங்கம்
  • அனைத்திலும் சாயின் அங்கம்; வாராதே நீயிருக்க பங்கம்
  • நீ விளிப்பதும் ‘பங்காரு’ தங்கம்
  • உன்னருட் கருணையே அபரஞ்சிப் பொன்னாம்
  • பஜன்கள் ஆனந்தப் பண்ணாம், பல்சுவையாய்
  • சேவைகள் ஆத்மா வினழகாம் – என்றும்
  • உனை நினைத்தலே மனதின் மகிழ்ச்சியே
  • பக்தன் ஒவ்வொருவரனுபவமே சத்தியமே
  • எப்படியெல்லாம் கருணைசெய்கின்றாய் சுவாமி
  • ஆச்சர்ய ஆனந்த எல்லைதான்
  • உன் அதிசய லீலா வினோதங்கள்
  • சித்ராவதியும் கூறுமே உந்தன் ஆனந்த மகிமைகளை
  • பூமியும் வானமும் சொல்லும் பரந்த விரிந்த
  • உன் கருணைத்வம் காரணத்வம்
  • உன் பக்தரைக் காத்து வரும் கலியுக தெய்வமே
  • உன் பாதார விந்தம் பணிந்தெழ அருள்வாய்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0