சாயி கணேசன்
- விநாயகனே விருப்பம் கூடிடத் துணை வருவாயே சாயி
- கணேசா
- எனையாளும் எந்தையே விருட்ச அருள்தரத் தன்னால்
- வந்தருளினால் போதும் சாயி கணேசா
- ஞானத்தால் ஞானப்பழம் பெற்ற ஐங்கரனே பல்சுவைப்
- பழங்களுனக்குப் பிடித்தம்போல்
- பன்மதப்பக்தருனக்குப்பிடிக்கும்
- கரும்பாய் நீ களிப்பாய்க் களிறாயும் வந்தே குறும்பாய்
- நல்வழிப்படுத்துவாய். ‘அவரை’ உனக்குப் பிடிக்கும்,
- எவருக்குத்தானுன்னைப் பிடிக்காது
- பச்சரிசி, வெல்லப் பிரசாதமுடன் னருளுக்குப்
- புட்டு படைக்கலாம்
- வெள்ளரிப் பழமுனக்கு நிவேதித்துப் பற்றற்ற
- நிலை யுணரலாம்
- கிழங்குகள் படைத்துனக்குக் குவலயம் குதூகலிக்கும்
- அவல் வைத்துத் தொழுது பக்தர் தம் அவாவை
- நிறைவேற்றுவர்
- கடலை நிவேதனம் சுடலை வரையுன் அருளாகக் கூடவரும்
- உன் மோதகம் கொழுக்கட்டை எல்லோருக்கும் பிடிக்குமே
- அப்பமும், உனக்கு எப்பவும் இஷ்டமே
- பாலும், தேனும், பாகும், பருப்பும் தந்து சங்கத்தமிழ்
- மூன்று கேட்ட அவ்வைக்குக் காட்சி தந்த நீ,
- உலகுக்குச் சாட்சி விநாயகர் எனப் பெயர் பெற்றாய்
- தந்தங்கள் உன் பக்தர்களின் சொந்தங்கள்
- பந்தங்களுன் தும்பிக்கையே நம்பிக்கை
- அரசு, ஆல், வன்னி நிழலில் நீயிருந்து இகபர சுகமதில்
- அருட்கழல் தர வேண்டும்
- உலகுக்கு முதல்வன் நீ உற்ற துணையானது
- எத்துனைப் பேர்களுக்கோ
- வள்ளிக் குமரனுக்கும், உதவியாய் வந்தாய்
- அகத்தியருக்கும், காகமாய்க் கமண்டலத்தில்
- குடகுமலைக்கு வந்து காவிரி தந்தாய்
- ஞாலம் சுற்றாமல், ஞானப்பழத்திற்குத் தாய் தந்தையரை
- வலம் வந்தாய். இப்படி எத்தனையோ
- இனிமையுன்னாலுண்டு சாயி கணேசா
- பிற சாந்தி, வேண்டாம் பிரசாந்தி போதும்
- மூஞ்சுறு வாகனதேவா
- பிரகாந்தி, சாந்தி தரவேண்டும், ஸ்ரீ சத்யசாயி கணேசா
- ஸ்ரீ சாயி கணேசா. சரணம் சரணம் ஸ்ரீ சத்யசாயி கணேசா.