குரு பூர்ணிமா

  • புத்தருக்கு ஞானம் கிடைத்திட்டது கயையில் – உன்
  • பக்தர்க்கு ஞானம் நிலைத்திட்டதுன் தயையில்
  • எத்திக்கும் எவ்வுயிரு முழன்றிருக்கும் மாயை தனில் – அது
  • சிதற விடும் நல்லுயிர்க்குள் வாழுமுன் லீலைகளில்
  • நல்லெண்ணம், நற்சிந்தனை, நற் சாட்சியாய்,
  • வாழ வேண்டும்
  • நற்செய்கை, நல் நம்பிக்கை, நல் வாய்ப்பில், திகழ வேண்டும்
  • நல் வாழ்க்கையில், நன் முயற்சியாய், நலம் பட
  • ஒளிர வேண்டும்
  • நற் காட்சியில், சாட்சியாய் நீ இருந்து அதில் நற்கதி
  • நல்க வேண்டும்
  • இதுவும் எண் குணங்களாமுன் குணங்களே ஸ்வாமி
  • பார்த்தன் நீ கார்மேக அருள்மழை பொழிய வேண்டும்
  • நற்செய்திகள் உன்னால் உலகினில் விதைக்கப்பட வேண்டும்
  • சிற்சபேசன் உன் பத மலரில் முகம் புதைக்கப்பட வேண்டும்
  • நற்கதி யில் நல வாழ்வு வாழும் இதயங்களில் நீ என்றும்
  • துதிக்கப்பட வேண்டும்
  • என்றும் உன் பொற்பத மலரடி நீ தர வேண்டும் சுவாமி
  • வியாசர் முதல் வேள்வி செய்த பாரதம் குரு பரம்பரை
  • வியத்தகு விந்தை புரியுதுன் பிரசாந்தியின் பக்தர் உரை
  • ஞாலம் முழுதும் ஞானமாய்ப் பரவும்தான் உன் மறை
  • ஞான தெய்வமே நீ ஸ்ரீ சத்யசாயி எனும் பிறை
  • கலாச்சாரக் கலைநயம், பண்பாட்டு விழாக்கள், பிரசாந்தியில்
  • ஏராளம் தான் – உன்
  • உற்சாக உலா விழாக்காலமதுவும் தாராளம்தான்
  • நிலாச்சாரலுன் சனாதனச் சாரமாயதில் நீ ஆதாரம்தான்
  • குரு பூர்ணிமையும் சத்யசாயி குருதெய்வமேதான்
  • உன் அவதார அனுக்கிரகப் பாதாரவிந்தம் தான்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0