நிதியுன்னன்பில்
- நீதியுன் கருணையில் பொதிந்து கிடக்கும்
- நிதியுன் னன்பில் நவமாய்ப் பதிந்து சிறக்கும்
- கதியுன் திருவடித் தாமரையில் வியந்து
- வியாபகமாய்ச் சிறகடித்துப் பறக்கும்
- சதியிருப்பினுன் சங்கல்ப்பத்தினால்
- தானாய்த் தனியே போகும்
- மதிமுழுதுமுன் மதிவதன மந்தஹாசமுகப் புன்னகையில்
- ஆனந்தமாய்த்தான் மயங்கும்
- விதி என்செய்யும், கோள்தானென்செய்யுமுன்அபயஹஸ்தம்
- ஆசி வழங்கு மழகினிலே மகிழும்
- நதிகளாயுன் பக்தநதிகள் சங்கமித்து னதன்புக்
- கருணைக்கடலில் கலந்து சங்கமிக்கும்
- கதிநீயாயுன் சனாதனதர்மத்தில் சந்ததியாய்ச் சரணடையும்
- பதி நீயே பர்த்திவாச பரசிவமே பாருக்குள்
- நல்நாடாம் நம் பாரத நாட்டிலவதரித்த
- பிரசாந்திக் கருவறைத் தெய்வமே உன்பத மலரில்
- பரவசம்தான் கிட்டும்
- தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனத்தில், ஆனந்த
- ஆர்ப்பரிப்பாய்க் கொட்டும் அருவியாய் ஓடும், நதியாய்,
- விரிந்து பரந்த ஆழியாய், வியாபித்த அண்டமாய்,
- ஆத்மாவில் மண்ணுக்கும் விண்ணுக்குமான
- எல்லையிலா ஆனந்தம் எட்டும், நிரப்பும், நிறையும்
- சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையில் இத்தரணியெங்கு
- முன்அன்பு மதம் இனம் மொழியால்
- மனிதம் மாண்புறும் அருள்தர வருகவே சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்