விழிமூடி வழிகேட்டு
- ஆலவிதையில் கிளைகளில் அஸ்வத்தாமனுன் விஸ்வாதாரம்
- ஆலமுண்டு அனைவரையும் காத்ததுன் விஸ்வாசக்
- கருணாதீரமது னதன்பின் ஈரம்
- சிவசாரம் சத்யசாயி சனாதனம்
- கணக்கிலடங்கா உன்மகிமைப் பிரதாப மெடுத்துரைக்க
- ஒரு ஆயுள்போறாது, தீராதே,
- எல்லையில்லா அவ்வானந்தத்தின் அளவே
- அள்ள அள்ளக் குறையாத ஆனந்த அன்புக்கடல் பாபாவின்
- அனந்தகோடி பிரம்மாண்டப் பரப்பிரும்மம்
- அண்டம் காத்து வழி நடத்தும்
- கருப் பிண்டம்கூட விழிமூடி வழிகேட்டு வாழ்வியலில்
- பிறந்துன் சங்கல்பத்தால் கடைத்தேரக்
- கண் மலரும், வழிநடக்கும்.
- கல்லில் தேரைக்கும் சொல்லில் பொருளுக்கும்
- உன் அன்புரையிலருள் கிட்டி ஆனந்தமயமாகும்
- உன் வாழ்வெங்கள் செய்தியே, உன் வார்த்தைகளெங்களின்
- சனாதனச் சாராம்சமே சுவாமி
- எங்களின் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாய்
- நீயிருந்தே குறையாதஅன்பும் பக்தியும்
- சேவைகளாற்றிடும் உடல், உள்ள, மன, பலம்
- தந்து காத்தருள வரமருள்கவே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்