நீ நினைத்தது மட்டிலும்
- திருவே வுன் திருவருளுலகில் உன் திவ்ய நாமம்
- சொல்ல வைத்து மகிழச்செய்தது
- உருவாய் மனிதச் சட்டையில் வந்தெமை
- உய்வித்த துன்னன்புக் கருணையின் எல்லையதுவே
- கருமுதல் திருவரை காத்து ரட்சிக்கின்றாய் ரட்சகனாய்
- மரு மதியுன் முகம் சொல்லும் பக்தர்களவரவர்க்கு ஆயிரம்
- அர்த்தங்கள் பாவனையாய் வருவினைகளகற்றி
- நற்பவி யளித்திட உன்னைத் தவிர ஏது கதி
- தருவரங்கள் நீ நினைத்தது மட்டிலும்
- தானென உணரச் செய்தாய்
- சேவைப்பணிகளாற்றி முன்வினைகள் கலைந்திட
- அருள்வித்தாய் அற்புதங்க ளளித்திட்டாய்
- கல்வி குடிநீர் மருத்துவம் இசையெனச் சேவைகளை
- வியாபித்து வியக்க வைத்தாய்
- பஜன் நாமஸ்மரணை நாம சங்கீர்த்தனம்
- செபம் தியானத்தில் ஆத்ம நிவேதனமளித்தாய்
- மலர் மாலைகள் உதிரிப்பூக்களிலும்கூட
- உயிரில் கலந்துறவாடுகிறாய் அதிசயிக்க வைக்கிறாய்
- அன்பு மதம் மொழி இனம் ஒன்றாயிணைத்து சாயி
- உலகம் சாயி குடும்பம் ஒருங்கிணைத்தாய்
- சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சையைப் போற்றி
- மனித மாண்பு வளர்த்திட்டாய்
- சகாவாய்த் தாயுமானவராயும் கருணை செய்வித்தாய்
- பிரசாந்திக் கருவறைத் தெய்வமுந்தனரு ளொன்றே போதும்
- இப்பிறவிப் பயனெய்திடவே
- உன் திருவடித் தாமரை மலர்களுக்கு
- ஆத்மவந்தனம் சுவாமி.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்