எங்கே ஓடமுடியும்

நீங்கள் எங்கே போனாலும் என்னையே சந்திக்கிறீர்கள். எங்கும் இருப்பவன் நான். பூமாதேவியிடமிருந்து நான்கு பைசா கடன்வாங்கிய முயலின் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தான் புதிய பகுதிக்குச் சென்று விட்டால் தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம் என அது நினைத்தது. எனவே, தான் கடன் வாங்கிய இடத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள இடத்துக்கு எவ்வளவு வேகமாகச் செல்ல முடியுமோ அவ்வளவு வேகத்துடன் ஒடியது.

கடைசியில் பெரிய நிம்மதியுடன் கீழே உட்கார்ந்து தனக்குள், ‘இப்போது அதைத் திருப்பிக் கொடுக்கும்படி யாரும் என்னிடம் கேட்க முடியாது” என்று சொல்லிக் கொண்டது.

அப்போது அது ஆச்சரியப்படத்தக்க அளவிற்குத் தன்னுடையக் காலடியிலிருந்து ஒரு குரல்! “பூமாதேவியாகிய நான் இதோ உன் காலுக்குக் கீழேயே இருக்கிறேன். எத்தனை தூரம் ஓடினாலும் நீ என்னிடமிருந்து தப்பமுடியாது” என்று கூறியது, முயலின் காதில் விழுந்தது.

அதைப்போலவே நீங்களும் என்னிடமிருந்து ஓடமுடியாது. புகலிடம் தேடி நீங்கள் எங்கே போனாலும் நான் உங்களிடம் வேண்டுவதெல்லாம் நல்ல நடத்தை, நல்ல பழக்கம், நல்ல சிந்தனை, நல்ல நட்பு முதலியவையே.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0