குருவாய்
- வியாச குருவின் மகாபாரதம், வால்மீகி கம்பராமாயண
- இதிகாசங்கங்களிலுமுன் அவதார மகிமை
- யிவ்வுலகறிந்தே உய்வுற்றன
- வியாழ அவதார குருவே, உன் லீலா வினோத
- மகிமைகளிப் பாரினிலதிசய அற்புதமானது
- வியாபகமா யித்தரணி முழுதும் வியாபித்திருக்கிறாய்
- பரப்பிரும்மமாய் ஞாபகமாய் உன்
- பக்தருள்ளங்களில் நீங்காமல் நிலைத்திருக்கிறாய்
- வேதாக மங்களாய்ப் பொருள் தந்துன்னைப்
- படிக்க வைக்கிறாய்
- நாதகீதமாயுனைப் பக்தியில் பண்பாடித் துதிக்கச் செய்கிறாய்
- செப, தவ,பஜனை, நாம ஸ்மரணையி லெப்போதும்
- திளைத்து மகிழ வைக்கிறாய்
- மாதா பிதா குரு தெய்வச்சகாவாய்ச் சகலருக்குமுன்
- கருணை நல்குகிறாய்
- சாமான்ய பக்தனுக்கும் உன் அன்பை யள்ளித்தருகிறாய்
- வேண்டிய வேண்டாதவரெனப் பாரபட்சமுனக்கேது சுவாமி
- உனை வேண்டியவர் முன்னர் சுலபப் பிரசன்னனாய்த்
- தோன்றி அவ்வுள்ளத்தின்
- சத்தியத்தைச் சாத்வீகமாக்குகிறாய்
- வேண்டி உன்னை அழைக்க உடன்வந்து
- உத்வேகமாய் நிறைவேற்றுகிறாய்
- நீயிருக்கக் குறையேதுமில்லையே நிறைமதி
- ஸ்ரீ சத்யசாயி தெய்வமே
- உன் மலரடி சரணம் சரணம் சரணம் சுவாமி