உண்மையான பக்தன் யார்?
சமயச்சொற்பொழிவாளர் ஒருவர் ஆற்றிய கீதைச் சொற்பொழிவைக்கேட்கவந்த பல பக்தர்களுக்கிடையே இருந்தக் கிராமவாசி ஒருவனைப்பற்றிய கதை இது.

வந்தவர் அனைவரும் வியக்கும்வண்ணம் ஒவ்வொரு சொல்லுக்கும், சொற்றொடருக்கும் உபந்யாசகர் அருமையாக விளக்கினார்; அந்த விளக்கம் அநேகமாகக் கிராமத்துவாசிக்குப் புரிந்திருக்க நியாயமில்லை.

இருப்பினும் அவன் கூர்ந்து கவனித்ததாகவே தோன்றியது. ஏனெனில் அவன் கன்னத்தில் கண்ணீர் இடைவிடாமல் வழிந்த வண்ணமிருந்தது. சொற்பொழிவின் இறுதியில் உபந்யாசகர் கிராமவாசியிடம் அப்படி அவன் அழக் காரணம் என்ன? என்று கேட்டதன்மூலம் பக்தியில் அவனுக்கிருந்த ஈடுபாட்டைக் கண்டு அனைவரும் அறிந்து வியந்தனர்.

அறிவு குழம்பிய அர்ஜுனனைச் சமதானப்படுத்த தேரில் அமர்ந்த வண்ணம் இறைவன் அறிவுரைக் கூறுவதற்காகக் கழுத்தைத் திருப்பிக்கொண்டுப் பட்ட கஷ்டத்தைப் பார்த்து அழுததாக அவன் கூறினான். “பகவான் கழுத்து வலியினால் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்?”, என்று சொன்னான்; சொல்லிக்கொண்டே அழுதான்.

அதுதான் உண்மையான பக்தி, இதிகாசப் பாத்திரங்களில் ஒன்றாகவே அவன் மாறிவிட்டான்; அதில் வரும் காட்சி முழுவதும் உயிருடன் திகழ்வதாகவே அவன் கருதினான்.
பட விளக்கம் :
செல்வி.செளஜன்யா ,
ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவி (மூன்றாம் பிரிவு)
Help Desk Number: