சாயி அட்சயம்

  • எங்கெங்கு நோக்கினும் எதிலும் எப்போதும்
  • எல்லாமும் உன் வடிவம்
  • அங்கங்கு கேட்கினும் முப்போது மெப்போதும்
  • இப்போதுமுந்தன் லீலா வினோத மகிமைகள்
  • சாயி பக்தர்கள் சங்கமிப்பிலுன் சாத்வீகம் மட்டுமே தெரிகிறது
  • ஒவ்வொருவர் வாழ்வியலிலும்
  • உன் வியாபகம்தான் தெரிகிறது
  • அவரவர்கள் தங்கள் அனுபவத்தைக் கூறுகையில்
  • ரசனையாய்க் கேட்டு மகிழ்கிறோம்
  • ஒவ்வொரு அணுவிலும் உன் கருணை பெருகி எங்கள்
  • பக்தி உருகி ஆத்மாவில் அமர்கிறது சுவாமி
  • எங்கள் முன் ஜென்மப் புண்ணியத்தால் இக்கலியில்
  • கிட்டிய தெய்வம் நீ மட்டும்தான் சுவாமி
  • இப்புவியில் வாழும் வரை உன் பக்தியில் திளைத்து
  • உன் சேவைகள் பல ஆற்றி வாழ்ந்தால் போதும்
  • அட்சயமாய் அன்புருவாயுன் அருள்தனில்
  • அட்சரம் பிசகாமலுன் கருணையில் சந்ததிகளே
  • கடைத்தேறியுன் கடாட்சத்தில் கவி புனையும்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0