சாயி சகாவாய்
- சாயி மாதா சங்கமிக்க வரும் நேரமிது
- சாயிபிதாவா யங்கம் வகிக்க வந்த நாளுமிது
- சாயி குருவாய்ப் பிரணவம் சொல்ல வந்த காலமிது
- சாயி தெய்வமாய் அவதரித்து வந்த கலியுகம் இது
- சாயி சகாவாய்ச் சகலருக்கும் சகல வினைகள்
- தீர்க்க வந்த சாட்சியிது
- சாயி சகல சர்வ தெய்வமாகி விட்ட காட்சி இது
- சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சையில் வந்த வடிவமிது
- என்றும் நித்ய பாராயணம் ஆகிவிட்ட சாயி வேதம் இது
- சனாதனம் விதைக்க வந்த சாரதிதான் இது
- சதாசிவம் என்றும் ஸ்ரீ சத்யசாயி ராமன் என்றும்
- அவரவர் தெய்வமாய் ஆகிவிட்ட அனுபூதி இது
- வெள்ளிதனில் வேள்வியாய் விடிவெள்ளியாய் வந்து
- அருள வேண்டும் ஸ்ரீ சத்யசாயி மாதா
- உன் பாதாரவிந்தங்களுக்கு வந்தனம் சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்