நவராத்திரி நாயகியாய்

பாவ புண்ணியங்களிலிருந்து விடுபட்ட உயிர்களைச் சீவனாம் சிவனிடம் சேர்த்தருள்பாலிக்கும் வல்லமை கொண்ட சாயி மனோன்மணித் தாயாராய், உயிர்களில் கலந்து அவரவர் பாவ புண்ணியங்களைத் தீர்த்தருள் புரிகின்ற சாயி சர்வபூத மணித்தாயாக, சூரிய பகவானுடன் கலந்து தீயன அழித்து நல்லன நல்கி நலம்மேலும் வாசிக்க

வேண்டுவன தந்து

சாயி நாராயணனைத் துதித்திடத்தாயி நாராயணியாக நித்ய ஆராதனையாக வருவாய் சத்ய நாராயணன் உன்னைப் பணிந்திட நித்திய பாராயணமாய் நிர்மலமாய்த் தெரிவாய் வேதம் நான்கிலும் வேள்வியாய் வேழ முகத்தவனாயருள்வாய் உனது நாதமெனும் கீதமதில் ஏழிசையாயுறைவாய் காணக் கண்கள் கோடி வேண்டும் காணுமிடமெலாம் காட்சியாய்மேலும் வாசிக்க

தங்கத்தேரில்

தங்கத் தேரில் பவனி வரும் பர்த்திவாசனைக் காணக்கண்கள் கோடி வேண்டும் இப்புவனமதி லுதித்து வந்த அவதாரமாய் எண்ணி எண்ணி மகிழ வேண்டும் சப்தபரிகள் பூட்டியதேர் ஏழு ஸ்வரங்களுக்கு மிணையாகும் சப்த மாதாக் களாயருளுமுன் சாட்சியும் காட்சியுமது நிசமாகும் தேர்வலம் வரும் ஊர்வலத்தில்மேலும் வாசிக்க

குரு பூர்ணிமா

புத்தருக்கு ஞானம் கிடைத்திட்டது கயையில் - உன் பக்தர்க்கு ஞானம் நிலைத்திட்டதுன் தயையில் எத்திக்கும் எவ்வுயிரு முழன்றிருக்கும் மாயை தனில் - அது சிதற விடும் நல்லுயிர்க்குள் வாழுமுன் லீலைகளில் நல்லெண்ணம், நற்சிந்தனை, நற் சாட்சியாய், வாழ வேண்டும் நற்செய்கை, நல்மேலும் வாசிக்க

சிவராத்திரியில்

மகாசிவராத்திரிப் பிரியனே லிங்கோத்பவனே பவசாகரத்தி னமுதனே சாயிலிங்கேஸ்வரனே அவதாரமாய் வந்த ஸ்ரீசத்ய சாயி சிவமே லீலா வினோதனே அபிஷேகப் பிரியனே அம்பல வாணனே அத்தனே - உன் ஐந்தெழுத்தைச் சொல்லத் தீவினைகளகலுமே துயர்யாவும் தீருமே பஞ்சாட்சர மந்திரத்தால் மும்மலங்களின் பிழைகளும் மாறுமேமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0