ஆதாரமே நீதான்

  • கனகதாரைத்தாயே ஆதாரமே ஸ்ரீ சாயி மகாலட்சுமி
  • நினைவுதோறுமென்றும் உன்பாதாரவிந்தம் சரணமே
  • ஸ்ரீ சாயி மகாலட்சுமி
  • நீயுமுன் பாதாரவிந்தமும் தானே
  • கேதாரன் நாயகியாய்க் கவசமாயிருந்து காக்கின்றதே
  • ஸ்ரீ சாயி மகாலட்சுமி
  • முழு நிலவுப் பூர்ணிமையிலுன் மதிமுகம்
  • முழுவதுமாயொன்றிவிடச் செய்துவிடுவதுண்மையே
  • ஸ்ரீ சாயி மகாலட்சுமி
  • சத்யநாராயண விரதப் பிரசாத அவதாரமே
  • உன் பவதாரமானதுவே ஸ்ரீ சாயி மகாலட்சுமி
  • பொங்கும் மங்கலமாய்த் தங்குதடையின்றிக்
  • கருணைமழை பொழிகின்றாயே ஸ்ரீ சாயி மகாலட்சுமி
  • மங்களச் செவ்வாய் வெள்ளியில்
  • ஸ்ரீ சத்ய சாயி மகாலட்சுமியாயுனைப்
  • போற்றித் துதித்திடவும் நீ திங்களாய் வருவாயே
  • வரவேண்டும் ஸ்ரீ சாயி மகாலட்சுமி
  • வரமருள்வாயே வந்தருள்வாயே கருணைபுரிவாயே
  • ஸ்ரீ சாயி மகாலட்சுமி
  • ‘நானிருக்கப்பயமே’னெனும் உன் மந்திரச் சொல்
  • மாற்றம் தருமே ஸ்ரீ சாயி மகாலட்சுமி
  • சித்ராவதிச் சித்திரமா யுன்லீலாவினோதங்கள்
  • வியக்க வைக்குமே ஸ்ரீ சாயி மகாலட்சுமி
  • என்றென்றும் உன் திவ்யச் சரணாகதியில் வாழ்வியல்
  • வாழ்ந்திட உன் அபயஹஸ்த ஆசி தர வேண்டும்
  • ஸ்ரீ சாயி மகாலட்சுமித் தாயே போற்றி போற்றியே.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0