அந்தநாள் மீண்டும் வருமா சாயீ!?

  • பாரினைக் காக்கும்
  • பர்த்தீஸ் வரனே!
  • தாரணி காக்கும்
  • தாமோ தரனே!
  • பக்தி செய்வோர்க்குப்
  • பதமலர் அருளும்
  • பகவான் உனக்கிது
  • பக்தையின் கடிதம்.
  • பண்டும் பண்டும்
  • பக்தர் பலரும்
  • கண்டும் கேட்டும்
  • காலங்காலமாய்ச்
  • சொல்லி மகிழும் உன்
  • சுந்தர லீலையை
  • அல்லும் பகலும்
  • அகமே நெகிழ
  • நினைந்து நினைந்தென்
  • நெஞ்சம் ஏங்கும்.
  • அனைத்தும் மீண்டும்
  • நடக்கா தாஎன
  • ஆதங்கப் புயல்
  • அகத்தில் வீங்கும்.
  • கஸ்தூரி கையில்
  • குடம்பிடித் திருக்க
  • ஹஸ்தம் சுழற்றிநீ
  • விபூதி பொழிய
  • ஷீரடி பாபா
  • அபிஷேகத்தை
  • நேரடி யாய் நீ
  • நிகழ்த்திய காட்சி
  • விந்தையில் விந்தை!
  • விசித்திர லீலை!
  • அந்த நாள் மீண்டும்
  • வருமா சாயீ?!
  • ஈசுவரன் உன்றன்
  • பிறந்த நாளிலே
  • ஈசுவரம் மாவந்து
  • தைலம் பூசநீ
  • குனிந்து கொடுத்துக்
  • குறும்புச் சிரிப்பில்
  • அமர்ந்து பொலிந்த
  • அந்நாள் வருமா?
  • பர்த்தியி லிருந்த
  • பக்தர் மனைகளில்
  • திடும்திடு மென்று நீ
  • சென்றதும் நின்றதும்
  • வாசலில் உனக்காய்
  • தவம் அவர் கிடக்க
  • பின்வழி வந்துநீ
  • கண்பொத் தியதும்
  • கன்னல் பேச்சும்
  • கனிமொழிக் குறும்பும்
  • இன்னல் தீர்க்கும்
  • இன்ப கீதமும்
  • பார்த்துக் கிடந்தவர்
  • பாக்கியம் செய்தவர்!
  • கேட்டுக் கிடந்தவர்
  • புண்ணியம் செய்தவர்!
  • அனந்தன் உந்தன்
  • அன்பை அன்றவர்
  • தினம்தினம் நுகர்ந்து
  • தித்தித் தனரே
  • அடடா அதையெலாம்
  • நினைத்தால் ஸ்வாமி
  • எதையெலாம் நாங்கள்
  • இழந்தோம் என்று
  • படபடத் தெங்கள்
  • மனந்துடிக் கின்றோம்
  • படங்களில் பார்த்தே
  • பசியாறு கின்றோம்.
  • சித்ரா வதிக்கரை
  • தீரத்தி லிருந்து
  • சித்ரான்னங்களும்
  • திருவிளை யாடலும்
  • கண்டு கண்டங்கு
  • களித்து வாழ்ந்த
  • குமாரம் மாவும்
  • குடும்பத் தினரும்
  • சொன்னது கேட்டால்
  • சுழலும் மனமே
  • எழுதியது படித்தால்
  • ஏங்கும் உளமே
  • வேர்முத லாக
  • விழுது வரைக்கும்
  • வேர்ப்பலா தானே
  • சாயி உன் சரிதம்!
  • குதிரைச் சவாரி
  • குளுகுளு கண்ணாடி
  • அதிரசப் பேச்சில்
  • பக்தரை மயக்கி
  • சிரித்துச் சிரித்து நீ
  • பயணம் செய்த
  • சரித்திரம் சம்பவம்
  • வருமா மீண்டும்?!
  • பனிமலையேற்றம்
  • பக்தர் தம்முடன்
  • பழங்கோ யில்களின்
  • கருவறை புகுந்து
  • லிங்கம் வில்வம்
  • தும்பை புதுநகை
  • தங்கம் படைத்துன்
  • விபூதி பொழிந்து
  • தெய்விகம் புதுக்கிய
  • தேவசம் பவம்
  • திரும்பவும் காணும்
  • திருநாள் வருமா?
  • மக்கள் வெள்ளத்தின்
  • இடையிடை யேநீ
  • மானாய் மயிலாய்த்
  • துள்ளி நடந்து
  • கானாம் ருதமே
  • கைதட்டிப் பாடி
  • தேனார் பேச்சில்
  • திசைகளை மயக்கி
  • ஆனாத மகிழ்வை
  • அளித்ததை யெல்லாம்
  • கண்டு களித்தவர்
  • கைலாச வாசிகள்!
  • வந்து சுவைத்தவர்
  • வைகுண்ட வாசிகள்!
  • ஒப்பிலாமணி உனை
  • பாலபரு வத்தில்
  • முப்போதும் வந்து
  • பராமரித் திருந்த
  • சுப்பம்மா விற்கு
  • கங்கைநீர் புகட்டி
  • சொர்க்கம் அனுப்பிய
  • சத்ய தெய்விகம்
  • நினைக்க நினைக்கஎன்
  • நெஞ்சம் உருகும்.
  • நீதுயில் வதுபோல்
  • சயனித் திருக்க
  • நீலாம் பரியில்
  • எம்.எஸ். இசைக்க
  • கேட்கும் போதே
  • மனம்இனிக் கிறதே
  • பார்க்கும் பாக்கியம்
  • வருமா மீண்டும்?!
  • காலையும் மாலையும்
  • தரிசனம் கிடைக்கலாம்
  • லீலைகள் காணும்
  • வாய்ப்பும் கிடைக்கலாம்
  • உன்னுடன் உன்னுடன்
  • வாழ்ந்து களித்த
  • அன்னவர் பெற்றது
  • யார்க்கினி கிடைக்கும்?
  • அந்தநாள் மீண்டும்
  • வருமா சாயீ?
  • அந்தநாள் அந்தநாள்
  • வருமா மீண்டும்?!
  • -ஶ்ரீ சத்யசாயி கவிதைகள்
  • என்றும் சாயிசேவையில்
  • கவிஞர். பொன்மணி
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0