எந்திர வாழ்விலுன் அவதாரம்

சந்திரவதன தரிசனமே உன் மந்திரவதனம் இந்திரலோகமாம் இன்பம் பர்த்திப்பபயணம் மந்தகாசப் புன்னகை முகனே நீ சர்வம், சகலம் என்றும் சுந்தர பஜனைப் பாடல்களே உன் பஜனம் எந்திரவாழ்வியலிலுன் னவதாரம் வந்ததும் சுந்தரத்தெலுங்கினில் நீ உரைத்ததும் இந்திய மண்ணிலுன் சனாதன தர்மம் சத்சங்கமமாய்Read More

கோவிந்தா என்றழைக்க

கோவிந்தா என்றழைக்க ஓடித்தான் வந்திடுவாய் கண்ணா கோபாலா என விளிக்கஉன் குழலோசையும் இசைத்திடுவாய் கேசவா எனத் தொழுதிட உன் வேணுகானம் கேட்கத்தான் செய்திடுவாய் மாதவா வென்று உனைப் பணிந்திட இம்மானிடப் பிறவி பெற்ற பயனைத்தான் உணர்த்திடுவாய் மாதவம் நாங்கள் செய்ததால்தான் நீRead More

பூவொடு நீரும் போதும்

புண்ணியப் பூசனை செய்பவர்க்குப் பூவொடு நீரும் வேண்டுமிது திருமூலர் வாக்கு எப்புண்ணியமும் அப்பூவும் நீரும் அனைத்துமே நீதான் உன்அன்புக்கருணைதானன்றி வேறேது சுவாமி ? 'சாய்ராம்" மந்திரச்சொல்லும் உன் அனுபூதியாமுனது நீறும் போதுமிது உன்பக்தர்தம் வாக்கும் நோக்குமே தரிசனம் ஸ்பர்சனம்சம்பாஷண முன்னில் பெற்றவர்களின்Read More

தருவாயே நற்பவி

ஏழ்பிறப்பும் தொடர்ந்துவரும் பரப்பிரம்மம் நீயே ஊழ்வினை களற்றிவிட உதவுவதும் நீதானே பாழ்மனதில் மும்மலங்கள் சேராமற் காத்தருள்வாயே உன் மலரடி தஞ்சம்புகுவோர்க்குத் தாழ்ந்து தயை செய்யாமல் விரைந்தருள் தந்து தான்தயை செய்தேகாத்தருள்கிறாய் தருவாயே நற்பவியாம்நற்கதியாய் உன் கருணையும் அபயஹஸ்த ஆசியுமே மண்ணுக்கும் விண்ணுக்கும்Read More

உன் குங்குமப் பூப்பாதத்தில்

குங்குமம் மஞ்சளுக்குக் குறைவில்லை உன் குங்குமப்பூப் பாதத்தில் பணிந்திடவே பொங்கும் புது வாழ்வுக்குப் பஞ்சமில்லை அதில் அங்கம் வகித்திட்ட தெய்வமுனை நினைந்திடவே மங்களங் களருள்வாய் சாயி மங்கள நாயகியே மகிமைகள் புரிந்திட்டே இமையாய்க் காத்திடுமெங்கள் இதயவாசி கருணைத் தெய்வமே உன் அன்பொன்றேRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0