ஏனாதிநாத நாயனார்

நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள எயினனூரில் அவதரித்த ஏனாதி நாதர் ஒரு சிறந்த சிவபக்தர். போர் வீரர்களுக்கு வாட்பயிற்சியளிக்கும் தொழில் புரிந்தார். தம்முடைய தொழிலில் வரும் வருவாயை சிவனடியார்களை வழிபட்டு உபசரிப்பதற்கு செலவிட்டு வந்தார். திருநீறு பூசிய தொண்டர் யாரைக் கண்டாலும் உடனே அவர் காலில் விழுந்து பணிந்துவிடுவார். வாட்பயிற்சியளிக்கும் தொழில் உரிமையை பெற எண்ணிய அதிசூரன் “போரில் வெற்றி பெறுபவருக்குத் தான் வாள் வித்தை கற்பிக்கும் உரிமை” என்று கூறி ஏனாதிநாதரைப் போருக்கு அழைத்தான்.

ஏனாதிநாதர் தன்னுடைய ஒரே வாளால் அதிசூரனுடைய வீரர்களை வெட்டி வீழ்த்தினார். அதனால் நாயனாரை வஞ்சனையால் கொல்லக் கருதிய அதிசூரன் கேடயத்தால் திருநீறு பூசிய தன் நெற்றியை கேடயத்தால் மறைத்தவாறு களத்திற்கு வந்தான். போர் துவங்கியவுடன் கேடயத்தை விலக்கினான். திருநீறு பூசிய நெற்றியைக் கண்டதும் நாயனார் போரிடாமல் நிற்க, அதிசூரன் வாளால் ஏனாதிநாதரைக் குத்தினான்.

திருநீறணிந்தவரிடம் ஏனாதிநாத நாயனார் காட்டிய பேரன்பைக் கண்ட ஈசன் உமாதேவியுடன் எழுந்தருளி, அவரை சிவகணங்களில் ஒருவராக்கிக்கொண்டார்.

ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0