உருத்திர பசுபதி நாயனார்

திருச்சி மாவட்டத்தில், கொல்லுமாங்குடி அருகில் உள்ள திருத்தலையூர் மிகவும் செழுமையானதொரு ஊர். அவ்வூரில் மறையவர் பலர் வாழ்ந்து வந்தனர். வேத வேள்வியை இடைவிடாமல் முறைப்படி செய்து வந்ததால் மழை பொழிந்து எங்கும் வளம் பெருகியது. தேனும் பாலும் அங்கே மலிந்து இருந்தன. அறமும் நீதியும் நெறியும் அம் மக்களின் உள்ளத்தில் நிரம்பியிருந்தன.

நிலத்தில் செழுமையும் வீட்டில் வளமும் நெஞ்சில் நற்குணமும் நிறைந்த அவ்வூரில் பசுபதியார் என்ற மறையவர் வாழ்ந்து வந்தார். வேதத்தை நன்கு பயின்ற அவர் சிறந்த சிவ பக்தர். அவர் ஸ்ரீருத்ரத்தை இடைவிடாமல் பாராயணம் செய்வதில் ஆர்வமுடையவராக இருந்தார்.

பசுபதியார் தினமும் அவ்வூரில் உள்ள தாமரைக் குளத்திற்குச் சென்று நீராடி விட்டுப் பின், கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு, சிவபெருமானின் செந்தாமரைப் பாதங்களை மனதில் தியானித்து, இடைவிடாது ‘ஸ்ரீருத்ரம்’ பாராயணம் செய்து வந்தார். அந்த ஸ்ரீருத்ரத்தின் பெருமைதான் என்ன? யஜுர் வேதத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன. அவையே எம்பெருமானின் சிரசாகக் கருதப்படுகிறது. இறைவனின் அழகிய திருவுருவங்களை விளக்கும் ‘ஸ்ரீருத்ரம்’ யஜுர் வேதத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீருத்ர பாராயணம், ஒருவருடைய உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும். அதிலும், நீரில் நின்று பாராயணம் செய்தால், மோக்ஷமே கிட்டும். அவ்வழியில், நம் ‘பசுபதியார்’ ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்து மோக்ஷம் பெற்றதால், ‘உருத்ர பசுபதி நாயனார்’ ஆனார்.

Pasupathiyar attained the name ‘Rudra Pasupathi Nayanar’ as he resorted to this Sadhana (standing neck deep in cold water and chanting the Sri Rudram) and with the Lord’s blessings, later he attained Moksha.

ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0