அனில் குமார்: சுவாமி! இன்றைக்கு உலகமே போராடிச் சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருக்கிறது. இன வெறுப்பு, வகுப்புச் சண்டை, ரத்தம் சிந்துதல், போர் போன்றவற்றைக் கேட்கிறோம். கருணைகூர்ந்து இன்றைய உலகத்துக்கு ஒரு செய்தி சொல்லுங்கள்.

பகவான்: இன்றைக்கு ஒற்றுமையில் வேற்றுமையைக் காண்கிற பல அறிவுஜீவிகளைக் காண்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர் மிகச் சிலரே. உலகில் இன்றுள்ள துயரங்கள், குழப்பம், சண்டைகள், போராட்டம் போன்றவற்றுக்கு இதுவே காரணம். மானவன், தானவனைப் (அரக்கன்) போல நடந்துகொள்கிறான். எனவே கொடூரமான, அரக்கத்தனமான,மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி: ஒருவேளை கலியுகத்தின் தாக்கத்தினால் இந்தக் காலத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே கூட எந்தப் புரிதலும் இருப்பதில்லையோ! பல குடும்பங்களில் விரோதம், சண்டை, குழப்பங்கள், போட்டி ஆகியவற்றைப் பார்க்கிறோம்; சில சமயங்களில் விவகாரம் முற்றிப்போய்க் குடும்பம் கோர்ட்டுக்கு இழுக்கப்படுகிறது. இந்தக் கஷ்டத்துக்கு ஒரு நிவாரணம் சொல்லுங்கள் சுவாமி!

பகவான்: உலகத்தில் வேறுபாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தாலும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உள்ளது. பன்முகத்தன்மை வெளிப்படத் தோன்றுகிறது; ஆனால் ஆதார ஒருமைப்பாடு உள்ளே மறைந்துள்ளது. இயற்கையனைத்திலும் இவ்விரண்டு அம்சங்களும் உண்டு. பூமியை எடுத்துக்கொள்ளுங்கள்; அது எல்லா இடத்திலும் ஒன்றுபோல இல்லை. குன்றுகள், மலைகள்,மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! எதிர்பார்த்தது போல மனிதன் நடந்துகொள்வதில்லை. மனிதத்தன்மையை அவன் இழந்து வருகிறான். இந்த நிலையில் அவன் தன்னை எப்படி உயர்மாற்றம் செய்துகொள்ள வேண்டும்? அவன் இப்படியே இருந்தால் சமூகம் என்ன ஆகும்?

பகவான்: சில வார்த்தைகளின் பொருளை அறியாமலே அவற்றை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் சொல்லும் வார்த்தையின் பொருளை அறிந்தால், அவற்றிலேயே விளக்கம் இருப்பதை அறிவீர்கள்; அவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் பொருள் தருகின்றன. ‘மானவ’ என்ற சொல்லின் பொருள் என்ன?மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0