அனில் குமார்: சுவாமி, ரிஷிகளுக்கிடையில் வால்மீகி எவ்வாறு குறிப்பிடத் தகுந்தவர்?

பகவான்: ராமாவதாரம் நிகழ்ந்த காலத்திலேயே ராமாயணம் எழுதவும் இசைக்கவும் பட்டது. மிகப்பெரிய ரிஷியும் தபஸ்வியுமான வால்மீகி ராமரின் சமகாலத்தவர் என்பதோடு, ராமாயணத்தை எழுதிய அவரே ஆதிகவியும் (முதல் கவிஞர்) ஆவார். ஒழுக்கத்துக்கும் கற்புக்கும் பெரும்புகழ் பெற்ற சீதாதேவிக்கு அவர் புகலிடம் அளித்தார்,மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! இப்போது நமது தேசத்தில் நாம் செய்யவேண்டியது என்ன?

பகவான்: இந்த தேசத்தை நீ காக்க வேண்டியதில்லை. சத்தியம், தர்மம் இரண்டையும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரண்டு தத்துவங்களையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அவை இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் காக்கும். இந்தப் பிரபஞ்சத்தை அதன் விரிவு மற்றும் வியாபகத்துடன் சேர்த்து நேசிக்கவேண்டும். எல்லோரையும்மேலும் வாசிக்க

அனில் குமார்: விக்கிரகங்கள், மரங்கள் போன்றவற்றை வழிபடுவதற்காக ஹிந்துக்கள் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்கள். இது மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை என்பதாகப் பலர் எண்ணுகிறார்கள். சுவாமி இதைப்பற்றி என்ன எண்ணுகிறார்?

பகவான்: பாரதம் உலகத்தின் ஆன்மீக மையம். அணுவிலிருந்து பிரம்மாண்டம் வரை, உயிருள்ள, உயிரற்ற அனைத்திலுமே தெய்வீகம் இருக்கிறதென்பதை நடைமுறையில் காட்டி, உபதேசித்து, பிரசாரம் செய்துவரும் நாடு இது. இந்த நாட்டில் புற்றிலிருந்து மலைவரை, மரத்திலிருந்து பறவைவரை அனைத்துமே பூஜிக்கப்படுகின்றன. பகவான்: பாரதம்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! கடவுள் எங்கும் நிறைந்தவர், யாவும் அறிந்தவர். அப்படியிருக்க, நாம் கோவில்களுக்குப் போவதும் ஷிர்டி, புட்டபர்த்தி, திருப்பதி போன்ற புண்யஸ்தலங்களுக்கு யாத்திரை போவதும் அவசியந்தானா?

பகவான்: இதுவொரு முட்டாள்தனமான கேள்வி. நீங்கள் உங்களுடைய அறியாமையையும், மனப்பிறழ்வான ‘நாகரீகச்’ சிந்தனைப் போக்கையும் காண்பிக்கிறீர்கள். சொல்வதற்கும் அனுபவத்துக்கும் தொடர்பே இல்லை. நீங்கள் கடவுள் எங்குமிருக்கிறார் என்கிறீர்கள். அது வெறும் உரத்த வாய்ப் பேச்சுதான். கடவுள் எங்கும் இருக்கிறார் என்கிற வலிமையானமேலும் வாசிக்க

பேராசிரியர் அனில் குமார்: ஸ்வாமி! பாரதம் மதமும் ஆன்மீகமும் நிரம்பிய தேசம். எல்லா அவதாரங்களும் இங்கு தோன்றின. அதற்குக் காரணம் என்ன?

பகவான்: பாரதம் ஒரு யோகபூமி, பாரதம் புண்யபூமி, பாரதம் கர்மபூமி, பாரதம் தியாகபூமி. இங்கே ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், யோகிகள், ஆன்ம சாதகர்கள் மற்றும் பக்தர்கள் இறைவனின் அணுக்கத்தை வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். இதனால் கடவுள் அவதாரம் இங்கே எடுக்க வேண்டியதாகிறது. அவர்களுடையமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0