அனில் குமார்: சுவாமி! ஒரே தெய்வீகம்தான் எல்லோரிலும் இருக்கிறதென்னும்போது, எதனால் வேற்றுமைகள் நிலவுகின்றன? தெய்வீகம் அதேதான் என்னும்போது, நாம் ஏன் ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருக்கிறோம்?

பகவான்: “ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்மா” (இரண்டாவது இல்லாத ஒன்றே பிரம்மம்) என்கிறது சாஸ்திரம். அப்படியானால் பன்மை, வேவ்வேறானவை, வேறுபாடுகள் போன்றவை எப்படி வந்தன? இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம். மின்சாரம் அதேதான் என்றாலும் வேவ்வேறு பல்புகளின் வோல்டேஜ் மாறுபடுகிறதல்லவா? A bulbமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! கடவுள் எங்கும் நிறைந்தவர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. கடவுள் எங்கும் இருக்கிறார். கருணைகூர்ந்து தெய்வத்தின் இந்த இயல்பை விளக்குங்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பகவான்: “பீஜம் மாம் சர்வபூதானாம்” என்கிறது பகவத்கீதை. அதன் பொருள் ‘படைப்புகள் அனைத்துக்கும், எல்லா உயிர்க்கும் கடவுளே விதை’ என்பதாகும். இங்கே ஒரு மாங்கொட்டை உள்ளது. அதை நீ பூமியில் விதைத்தால், நாளடைவில் அது முளைக்கிறது. அதிலிருந்து வேர் வருகிறது, தண்டு,மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி, சாகார (உருவமுள்ள) கடவுளை வழிபடுதல், நிராகார (உருவமற்ற) கடவுளை வழிபடுதல் இவ்விரண்டில் எது மேலானது?

பகவான்: என் கருத்துப்படி இரண்டுமே சமமானவைதாம். இரண்டில் எதுவும் மற்றதைவிட உயர்ந்ததல்ல. இப்போது நீ கோயம்புத்தூரில் இருக்கிறாய். இங்கே நிலம் எல்லா இடத்திலும் சமதளமாக இருக்கிறது; யாரும் அதைச் சமப்படுத்தவில்லை. இப்படி இந்த நிலத்தை யாரும் செய்யவில்லை. இது அடிப்படையில் கோயம்புத்தூரின்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! கடவுளின் வடிவுள்ள தன்மை மற்றும் வடிவற்ற தன்மைபற்றிக் கூறுங்கள்.

பகவான்: இங்கேதான் பலர் குழம்பிவிடுகிறார்கள். உருவம் என்பதே இல்லாவிட்டால் உனக்கு எங்கிருந்து உருவற்றது கிடைக்கும்? உருவமில்லாததை நீ எப்படிக் கற்பனை செய்வாய்? உனக்கு ஓர் உருவம் இருக்கிறது, அதனால் நீ உருவமுள்ள கடவுளைப்பற்றித்தான் சிந்திக்க முடியும். உதாரணமாக, ஒரு மீன் கடவுளைமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! கடவுள் குணம் குறிகள் அற்றவர். சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களுக்கு அவர் அப்பாற்பட்டவர். ஆனால் நாம் இந்த குணங்களில் தளைப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க, நாம் எப்படி இறையனுபூதி பெறுவது?

பகவான்: கடவுளுக்கு இரண்டு தன்மைகள் உண்டு. நாம் அவரை குணம் குறிகள் கொண்டவராகவும், அவை இல்லாதவராகவும் அனுபவிக்க முடியும். நீங்கள் ஒன்றை முக்கியமாக அறியவேண்டும்: குணங்களிலே கடவுள் இருக்கிறார். அவை அவரிடம் இல்லை. தம்மில் தெய்வீகம் இல்லையெனில் குணங்களால் செயல்பட முடியாது.மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0