அனில் குமார்: சுவாமி! தசரத சக்ரவர்த்தி அவருடைய புத்ரகாமேஷ்டி யாகம் ஆகியவை குறித்து நாங்கள் அறிவோம். ஜனக மகாராஜரைப்பற்றிச் சிறிது சொல்லுங்கள்.

பகவான்: ஜனகர் ஒரு ராஜயோகி, பெரிய ஞானி, உடல் பிரக்ஞையே இல்லாதவர். அதனால் அவர் விதேஹர் (உடற்பற்று இல்லாதவர்) என அறியப்பட்டார். அவரது மகளான சீதை, வைதேஹி என அறியப்பட்டாள். மிகுந்த குரு பக்தியும், சிறந்த சாஸ்திர ஞானமும், பற்றின்மையும் கொண்டவர்மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி, ரிஷிகளுக்கிடையில் வால்மீகி எவ்வாறு குறிப்பிடத் தகுந்தவர்?

பகவான்: ராமாவதாரம் நிகழ்ந்த காலத்திலேயே ராமாயணம் எழுதவும் இசைக்கவும் பட்டது. மிகப்பெரிய ரிஷியும் தபஸ்வியுமான வால்மீகி ராமரின் சமகாலத்தவர் என்பதோடு, ராமாயணத்தை எழுதிய அவரே ஆதிகவியும் (முதல் கவிஞர்) ஆவார். ஒழுக்கத்துக்கும் கற்புக்கும் பெரும்புகழ் பெற்ற சீதாதேவிக்கு அவர் புகலிடம் அளித்தார்,மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! வசிஷ்டர், விஸ்வாமித்திரர் என்ற ராமாயண காவியத்தின் மிக முக்கியமான இரண்டு ரிஷிகளைப்பற்றிக் கூறுங்கள்.

பகவான்: பழமையான காலத்தில் அரசர்கள் எப்போதும் குருவினால் வழிகாட்டப்பட்டனர். எல்லா முக்கிய விஷயங்களிலும் அவர்களோடு கலந்து ஆலோசித்தனர். அப்படித்தான் சத்தியமும் தர்மமும் கடைப்பிடிக்கவும் நிலைநாட்டவும் பட்டன. அரசர்கள் தமது குருவை நாடி ஆசீர்வாதமும் வழிகாட்டலும் பெற்றதால் மகோன்னதம் அடைந்ததைச் சரித்திரம் சொல்கிறது.மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! இப்போது நமது தேசத்தில் நாம் செய்யவேண்டியது என்ன?

பகவான்: இந்த தேசத்தை நீ காக்க வேண்டியதில்லை. சத்தியம், தர்மம் இரண்டையும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரண்டு தத்துவங்களையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அவை இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் காக்கும். இந்தப் பிரபஞ்சத்தை அதன் விரிவு மற்றும் வியாபகத்துடன் சேர்த்து நேசிக்கவேண்டும். எல்லோரையும்மேலும் வாசிக்க

அனில் குமார்: விக்கிரகங்கள், மரங்கள் போன்றவற்றை வழிபடுவதற்காக ஹிந்துக்கள் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்கள். இது மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை என்பதாகப் பலர் எண்ணுகிறார்கள். சுவாமி இதைப்பற்றி என்ன எண்ணுகிறார்?

பகவான்: பாரதம் உலகத்தின் ஆன்மீக மையம். அணுவிலிருந்து பிரம்மாண்டம் வரை, உயிருள்ள, உயிரற்ற அனைத்திலுமே தெய்வீகம் இருக்கிறதென்பதை நடைமுறையில் காட்டி, உபதேசித்து, பிரசாரம் செய்துவரும் நாடு இது. இந்த நாட்டில் புற்றிலிருந்து மலைவரை, மரத்திலிருந்து பறவைவரை அனைத்துமே பூஜிக்கப்படுகின்றன. பகவான்: பாரதம்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
₹0.00
0