வேத காயத்திரி

வேத மூலாதாரமே சாயிவேத காயத்ரி தேவியுன் பாதாத்ம வந்தனம்தான் சத்திய சந்தியா வந்தனம் மந்திரங்களில் நான் காயத்திரியாக உள்ளேன் எனக் கண்ணனவதாரத்தி லுரைத்திட்டாய் விசுவாமித்திர உபதேசம் பெற்றாய், ஸ்ரீ ராம அவதாரத்தில் வேதசாரத்தில் த்ரயியில் சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, அஷ்ட லட்சுமிகள்மேலும் வாசிக்க

தக்க தருணம்

கற்பகத்தரு வாய்க்கிட்டிய சாயி தெய்வமுன் பொற்பதம் பிடித்தே தொழுகின்றோம் கற்றவை மேன்மேலும்பெருகிட, மற்றவை அதன்தக்க தருணம் நடந்திட, சுற்றம் நட்புகள் சுகம்பெற, உற்றார் உறவினர் நலம்பெற, வாழ்வியலில் குலம் உன்னால் தழைத்திட, சனாதனம் மலர்ந்திட, மனிதம் வளர்ந்திடப், பசுமைப்பயிர்கள் செழித்திட, மகிழ்வுமேலும் வாசிக்க

ஆனந்தம்

கூப்பிய கரங்களிலுன்னை வணங்குதலானந்தம் கூவிய குரலுன்னில் கேட்குமே வெனும் பேரானந்தம் மேவிய சாயி உன் வடிவினை நினைப்பதுவே பரமானந்தம் தூவிய வுன்மலர்ப்பாதங்களில் மலராய் வீழ்தல் திவ்யானந்தம் நித்தமும் உன் நாமம் சொல்லி இதயமாம் சிம்மாசனத்தில் பூசனை செய்தலே நித்தியானந்தம் பர்த்தியம்பதியிலுன்னைப் பிரசாந்திமேலும் வாசிக்க

“முருகு” அழகு

முருகு அழகு உன் திருப்புகழோ அழகோ அழகு பிரம்ம விஷ்ணு சிவனுமுன் னுள்ளிலுறையும் உன்னைச் சிந்தித்துத்தொழும் அன்பர்களுக்குச் சந்ததிகள் காப்பாய் சங்கடங்கள் தீர்ப்பாய், ஞான சக்தியாய் ஞாலத்தில் ஞானம் நல்கிட நற்றுணையாக வந்திடுவாய் வேலிருக்க வினையில்லை, மயிலிருக்கப் பயமில்லை உன்னருளிருக்கக் கவலையில்லைமேலும் வாசிக்க

சரணாகதியே சரணம்

செய்வதும் செய்விப்பதும் செயலுமதுவே உன் ஆத்ம தத்துவம் சுவாமி குமரக் கடவுளின் வள்ளியாய்க், கண்ணனின் ராதையாய், இறைவனில் பாதி இறைவி உமையம்மையாய், மாலின் மஹாலஹ்மியாய், பிரம்ம சரஸ்வதிதேவியாய், நவசக்திகள் அனைத்தும் ஆன ஆதி சக்தியாய், மங்கலங்கள் தந்திட மகிமைகள் புரிந்திட மானசீகமாய்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0